Monday, December 9, 2013

Photo: வானத் தெருவில் சிதறிக் கிடக்கும் 
நட்சத்திர கற்களைத் தன்
விலக்குமாறு ஆகிய செங்கதிர்களால் 
ஒன்று சேர்த்து - வெண்ணிலா 
என்ற தொட்டியில் - கொட்டி 
 இருட்டு எனும் சாணமிட்டு
 அதில் நேரமாகிய புள்ளியிட்டு
 காலை  எனும் கோலம் போடும்
 அழகிய இளம்பரிதியே 
 என் உயிர் காதலி .
-சிவராஜ்                                                                    வானத் தெருவில் சிதறிக் கிடக்கும் 
நட்சத்திர கற்களைத் தன்
விலக்குமாறு ஆகிய செங்கதிர்களால் 
ஒன்று சேர்த்து - வெண்ணிலா 
என்ற தொட்டியில் - கொட்டி 
இருட்டு எனும் சாணமிட்டு
அதில் நேரமாகிய புள்ளியிட்டு
காலை எனும் கோலம் போடும்
அழகிய இளம்பரிதியே 
என் உயிர் காதலி .
-சிவராஜ்
PETIT SEMINAIRE
தங்கத் தமிழினை 
தரணிக்கு தருவித்தது 
ஆங்கில அறிவினை 
அள்ளி அருளியது
கணித கலையினை 
கடமையுடன் கற்பித்தது
விஞ்ஞான வளர்ச்சியினை
வியக்குமளவு விதைத்தது
உயிரியல் உண்மைகளை
உள்ளத்தில் உருவித்தது
புவியல் படைப்புகளை
புலனுக்கு புகட்டியது
வரலாற்று வாழ்காலத்தை
வாழ்விற்கு வகுத்தது
புதுவையில் பலரின்
புகழில் புரள்வது
எழில்மிக்க பள்ளியே
என் பள்ளி .
...சிவராஜ்

ஆப்பரிகாவில் மட்டுமல்ல -----எங்கெல்லாம் வறுமை, இனவேறுபாடு, போராட்டங்கள் , தீவரவாதங்கள் , வேற்றுமை ------, குறைந்து,---- எங்கெல்லாம் அமைதி, அன்பு, பாசம், சகோதரதன்மை, கலங்கமில்லா நட்பு நிலவுகிறதோ - அது இலங்கை, ஆந்திரா..... ஏன்? நம் மனங்களில் உருவானாலும் - அதுவே - அந்த ஒப்பில்லா தலைவனுக்கு (NELSON MANDELA)நாம் செலுத்தும் கவுரவம், அஞ்சலி.

Sunday, December 8, 2013



நான் தான் சிவராஜ் என்ற கந்தன்.