Monday, December 9, 2013

(என் காலஞ்சென்ற அம்மாவிற்கு)


Photo: (என் காலஞ்சென்ற  அம்மாவிற்கு)

அம்மா !
இன்று தனிமையில் அழுகிறேன் 
உறவுகள் இல்லாமல் அல்ல 
உன் தாய் அன்பு காணாமல் அம்மா .

முதன்முதலாய்
நான் பிறந்த போது 
என் முகம் பார்த்து சிரித்தாய் 
நான் அழுதுகொண்டிருந்தேன் !
அம்மா
கடைசியாக உன்முகம் பார்த்து 
நான் அழுதேன் 
நீ ஏன் சிரிக்கவில்லை?

    பட்டணத்து மருத்துவமனையில்
    பணம் பறிப்பார்கள் - என்றார்கள்
    பரவாயில்லை   - என்றேன்
    பாவிகள் விலைமதிப்பில்லா உன்னையே 
    பறிப்பார்கள் என 
    அறியேன் தாயே!

இங்கிருந்து போகும்போது 
நினைவில்லாமல் சென்றாய் 
அங்கிருந்து வரும்போது 
உயிரில்லாமல் வந்தாய்
இடைப்பட்ட காலத்தில்
அப்படி என்ன பேச்சு 
அப்பப்பா!!

கொஞ்சம்  கொஞ்சல் 
கொஞ்சம்  அழுகை 
மிகுந்த      மகிழ்ச்சி 
   பொக்கை   வாயில்
   வார்த்தை   நடனம் 
    நாடகத்தன்மையில் எல்லோருக்கும் 
    பாராட்டு   பத்திரம் 
    கடைசி     நாட்களில்
    எல்லோரும் மன்னிக்கப்பட்டார்கள் .
இறப்பாய்   என 
உனக்கு    தெரியாது 
உன்னை   இழப்பேன் 
என எனக்கு தெரியாது 
13          நாட்கள் 
வாழ்ந்து   இறந்தாய்
அம்மா!

உனக்கு  செலவு செய்ததால்
எங்கள்   சம்பாத்தியம் 
கவுரவம் அடைந்தது 
அம்மா!

உன்     அண்ணன்  மேல்
           அளவில்லா பாசம் 
           அதனால் தான்
          அவர் பெயர்கொண்ட
          மருத்துவமனையில்
         அமரராகிவிட்டாயா ?  அல்லது 
என்   அண்ணன்  மேல்
         அளவில்லா பாசம்
         என்பதால் அவர் வாழும்
         ஊரில் அமரராகிவிட்டாயா ?

போதும் தாயே
வாழ்ந்தது போதும்
18ல்  மணமாகி வந்தாய்
78ல்  மரணமாகி  சென்றாய்
60    ஆண்டு திருமண வாழ்வில்
நீ 
     பட்ட இன்னல்கள்,
    வறுமைகள்     இழப்புகள்,
    வெற்றிகள்      தோல்விகள்
    ஏமாற்றங்கள்  மகிழ்ச்சிகள்  
    போதும் தாயே போதும் !
நீ 

திரும்பி     வந்திருந்தாலும் 
நோயின்   பிடியில்
சூழ்நிலையின் பிடியில் 
அந்திம கால அவஸ்தையில் 
சிக்கி    தவிக்காமல் 
நீ மரணம் அடைந்து 
என் மானம் காத்தாய் 
என் உயிர் உள்ளவரை
உன் நினைவு தாங்கி வாழ்வேன்
அம்மா.....



அம்மா !
இன்று தனிமையில் அழுகிறேன் 
உறவுகள் இல்லாமல் அல்ல 
உன் தாய் அன்பு காணாமல் அம்மா .

முதன்முதலாய்
நான் பிறந்த போது
என் முகம் பார்த்து சிரித்தாய்
நான் அழுதுகொண்டிருந்தேன் !
அம்மா
கடைசியாக உன்முகம் பார்த்து
நான் அழுதேன்
நீ ஏன் சிரிக்கவில்லை?

பட்டணத்து மருத்துவமனையில்
பணம் பறிப்பார்கள் - என்றார்கள்
பரவாயில்லை - என்றேன்
பாவிகள் விலைமதிப்பில்லா உன்னையே
பறிப்பார்கள் என
அறியேன் தாயே!

இங்கிருந்து போகும்போது
நினைவில்லாமல் சென்றாய்
அங்கிருந்து வரும்போது
உயிரில்லாமல் வந்தாய்
இடைப்பட்ட காலத்தில்
அப்படி என்ன பேச்சு
அப்பப்பா!!

கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் அழுகை
மிகுந்த மகிழ்ச்சி
பொக்கை வாயில்
வார்த்தை நடனம்
நாடகத்தன்மையில் எல்லோருக்கும்
பாராட்டு பத்திரம்
கடைசி நாட்களில்
எல்லோரும் மன்னிக்கப்பட்டார்கள் .
இறப்பாய் என
உனக்கு தெரியாது
உன்னை இழப்பேன்
என எனக்கு தெரியாது
13 நாட்கள்
வாழ்ந்து இறந்தாய்
அம்மா!

உனக்கு செலவு செய்ததால்
எங்கள் சம்பாத்தியம்
கவுரவம் அடைந்தது
அம்மா!

உன் அண்ணன் மேல்
அளவில்லா பாசம்
அதனால் தான்
அவர் பெயர்கொண்ட
மருத்துவமனையில்
அமரராகிவிட்டாயா ? அல்லது
என் அண்ணன் மேல்
அளவில்லா பாசம்
என்பதால் அவர் வாழும்
ஊரில் அமரராகிவிட்டாயா ?

போதும் தாயே
வாழ்ந்தது போதும்
18ல் மணமாகி வந்தாய்
78ல் மரணமாகி சென்றாய்
60 ஆண்டு திருமண வாழ்வில்
நீ
பட்ட இன்னல்கள்,
வறுமைகள் இழப்புகள்,
வெற்றிகள் தோல்விகள்
ஏமாற்றங்கள் மகிழ்ச்சிகள்
போதும் தாயே போதும் !
நீ

திரும்பி வந்திருந்தாலும்
நோயின் பிடியில்
சூழ்நிலையின் பிடியில்
அந்திம கால அவஸ்தையில்
சிக்கி தவிக்காமல்
நீ மரணம் அடைந்து
என் மானம் காத்தாய்
என் உயிர் உள்ளவரை
உன் நினைவு தாங்கி வாழ்வேன்
அம்மா.....

No comments:

Post a Comment